வெறும் ரூ.30,499க்கு ஒன்பிளஸ் பேட்..! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-இன் அதிரடி ஆஃபர்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் அதன் 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது.

இதன் ஒரு ஒன்பிளஸ் தனது பயனர்களுக்காக இந்தியாவில் கம்யூனிட்டி சேல்-ஐ (OnePlus Community Sale) அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் நார்ட் 3, ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சீரிஸ் போன்ற சாதனங்கள் மீது தள்ளுபடி மட்டும் சலுகைகளை அறிவித்துள்ளது.

இதில் குறிப்பிட்ட சாதனங்களுக்கு ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடி உள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது நாளை அதாவது டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள சில சாதனங்களைக் காணலாம்.

முதலாவதாக, நிறுவனத்தின் முதன்மையான ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட். இதன் 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் வேரியண்ட் விலை சாதாரண நாட்களில் ரூ.37,999 என விற்பனையாகிறது. தற்போது 6% தள்ளுபடியுடன் ரூ.2,500 குறைக்கப்பட்டு ரூ.35,499 ஆக உள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.5,000 குறைக்கப்பட்டு, ஒன்பிளஸ் பேடை ரூ.30,499 -க்கு வாங்கிக்கொள்ளலாம்.

ரூ.24,999 க்கு விற்பனைக்கு உள்ள ஒன்பிளஸ் நார்ட் சிஇ3 5ஜி போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட் தற்போது ரூ.2,000 குறைக்கப்பட்டு ரூ.22,999 ஆக உள்ளது. ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தினால் ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். ஒன்பிளஸ் சாதனங்களுக்கான சார்ஜிங் கேபிள் போன்ற உதிரி பாகங்கள் ரூ.399 என்கிற விலையில் இருந்துத் தொடங்குகிறது.

மேலும், ஆடியோ டிவைஸ் ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சீரிஸ் டிடபிள்யஎஸ் ஏர்பட்ஸ் ஆனது ரூ.2,499 விலையிலிருந்து ரூ.1,599 என்ற விலைக்கு மாறியுள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தினால் ரூ.200 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆனது ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.7,999 ஆக உள்ளது.