அஜித் பிறந்தநாள் அன்று டிரைலர்.? நண்பனுக்காக களமிறங்கும் மக்கள் செல்வன்.!

வரும் மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமார் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, அஜீத்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான, ஆர்.கே.சுரேஷ். அவர் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மது ஷாலினி, ஷம்னா காசிம், பகவதி பெருமாள், அணில் முரளி, இளவரசு போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை இல்லாத விதமாக வித்தியாசமான கதையில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் மே 1-ஆம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு விசித்திரன் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். அந்த டிரைலரை நடிகரும் ஆர்.கே.சுரேஷின் நெருங்கிய நண்பருமான விஜய் சேதுபதி வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.