தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிவு!

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிவு!

small onion and tomato price

இன்றயை நிலவரப்படி சின்ன வெங்காயத்தின் விலை சரிவை கண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தக்காளி விலை பெட்ரோல் விலைக்கு போட்டியாக விற்கப்பட்டு வந்தது. வெளிமாநிலங்களில் தக்காளி வரத்து குறைவாக இருந்ததாலும், மழை காரணமாகவும், தக்காளி விலை கடும் உச்சத்தில் விற்கப்பட்டது. அதேபோல், சின்ன வெங்காயத்தின் விளையும் அதற்கு இணையாக உயர்ந்தது.

தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று விலை சரிந்தது. அதன்படி, இன்று சின்ன வெங்காயம் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் இதே சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது.

பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி, ரூ.45- 50க்கு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. இப்பொது, தக்காளியின் விலையை விட சின்ன வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube