மின்சார ஸ்கூட்டர்களின் விலையை அதிரடியாக குறைத்த ஒகாயா நிறுவனம்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன பிராண்டாக ஒகாயா EV விளங்குகிறது. இந்த நிலையில் தனது அனைத்து மின்சார வாகன மாடல்களின் விலைகளையும் அதிரடியாக குறைத்துள்ளது ஒகாயா, அதன்படி ஒகாயா மின்சார வாகன நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு இந்த பிப்ரவரி 2024-ல் ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து செயல்திறனுக்கு பெயர் பெற்ற ஒகாயாவின் மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் தற்போது ரூ.74,899 என்ற விலையில் தொடங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர் ரேஞ்சை பெற முடியும்.

Read More – யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..! பைக் பிரியர்கள் அதிர்ச்சி

இது குறித்து ஒகாயா நிர்வாக இயக்குநர் அன்ஷுல் குப்தா பேசும் போது, ”எங்களின் தயாரிப்பு மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த அனைத்து மாடல்களின் விலைகளையும் கணிசமாக குறைத்துள்ளோம். இந்த நடவடிக்கை இந்தியாவில் மக்களிடையே மின்சார வாகனங்களை வாங்கும் எண்ணத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம்” என்றார்

 

 

Leave a Comment