#NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டெவோன் கான்வே 46 பந்துகளில் 63 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில் 68 ரன்களும் விளாசினர். இறுதியில் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் நல்லதொரு தொடக்கத்தை அந்த அணிக்கு கொடுக்க தவறினார்.

#NZvsAUS : 216 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூஸிலாந்து அணி ..!

மேலும், டேவிட் வார்னர் நன்றாக விளையாடி கொண்டிருந்த நிலையில் 32 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிரிச்சி கொடுத்தனர். அதை தொடர்ந்து அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷும், ஜோஷ் இங்கிலிஸும் சற்று பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கொரை உயர்த்தி வந்தனர்.பின் இருவரின் கூட்டணியில் 61 ரன்களை சேர்த்து இருந்த போது ஜோஷ் இங்கிலிஸ் 20 ரங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறு முனையில் அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து கொண்டிருந்தார். அவருடன் டிம் டேவிட் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து, மிட்செல் மார்ஷுடன் ரன்களை சேர்த்தார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ வீசினார்.

அந்த ஓவரை எதிர் கொண்ட டிம் டேவிட் சிறப்பாக விளையாடினார். கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் அந்த பந்தை பவுண்டரி அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். பொறுப்புடன் விளையாடிய மிட்செல் மார்ஷ் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல்  அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய டிம் டேவிட் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment