திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

tirupur

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையகோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வருகின்ற 3-ம் தேதி (ஆடி -18) அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 26.08.2023 அன்று சனிக்கிழமை பணிநாளாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. . உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாள் அன்று அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரூவூலகம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube