31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

இபிஎஸ் எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும், அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுந்திருந்தனர். இந்த நிலையில், இவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்று, இதுதொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.