தமிழில் ஒரு கலைஞரும் என்னை வாழ்த்தவில்லை.! – மேடையில் வருத்தப்பட்ட ஆர்.கே.சுரேஷ்.!

இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விசித்திரன்”. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜோசப்’  படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் படம் 45 சர்வதேச விருதைகளையும் பெற்றது.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.கே.சுரேஷ் “விசித்திரன் படத்திற்கு இதுவரை 47 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் பலரும் என்னை அழைத்து வாழ்த்தி உள்ளனர். இதில் எனக்கு பெரிய வருத்தம் என்ன, வென்றால் தமிழில் இருந்து எந்த ஒரு கலைஞரும் கூப்பிட்டு வாழ்த்தவில்லை” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment