கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு?

கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு?

rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பை மிஞ்சும் அளவுக்கு பாடலில் வரும் காட்சிகளுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால், இந்த இரண்டு பாடல்களிலும் ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் மிகவும் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் பலரும் ஒரு பாடலில் கூட இவ்வளவு முத்தக்காட்சியா? என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா  புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், இனிமேல் ராஷ்மிகா  நயன்தாராவை போல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கவுள்ளாராம். கவர்ச்சி கதாபாத்திரம் மற்றும் நல்ல கதையம்சம் இல்லை என்றால் நடிக்கவேண்டாம் என்று முடிவெடித்துவிட்டாராம்.

இதனால் தொடர்ச்சியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோயின்களுக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதில் எந்த கதை எல்லாம் பிடிக்கிறதோ அதில் எல்லாம் தொடர்ச்சியாக நடிக்கலாம் என திட்டமிட்டு இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், நடிகை ராஷ்மிகா  தற்போது தெலுங்கில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் ரெயின்போ, “தி கோர்ள் ஃப்ரெண்ட்’ ஆகிய திரைப்படங்களும் ஹீரோயினுக்கு முக்கியதுவம் கொண்ட திரைப்படம் தானாம். நடிகர் ராஷ்மிகா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube