தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

யூடியூப் பயனங்களின் கவனத்திற்கு, இனி தவறான தலைப்புக்கள் கொடுத்து ஏமாற்ற முடியாது. கிரியேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூடியூப் நிறுவனம்.

Youtube Fake News

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இவ்வாறு அனைத்து வசதிகளும் நிறைந்த யூடியூப்  மில்லியனுக்கு மேலான பயனர்களை கொண்டுள்ளது.

வீட்டில் இருந்து கொண்டே பயனர்கள் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், சமையல் , விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாசம் உள்ளிட்ட அனைத்திற்குகும் இந்த யூடியூப் தளத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்மைய காலமாக வீடியோக்களை பதிவிட்டு வரும் பயனர்கள், சிறந்த ‘கிளிக் பைட்’ என்கிற பெயரில கவர்ச்சியான தலைப்பு மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வைத்து பார்வைகளை கிளிக் செய்ய வைக்கின்றனர். உதாரணத்துக்கு ஒரு தலைவர் உயிரிழந்தார் என்ற தலைப்பின் கீழ், டைட்டிலை கவர்ச்சியாக வைத்து பின்னர் உள்ளே வந்து பார்த்தால் வீடியோவில் அது பற்றி இல்லாத தகவல் அல்லது வேற ஏதும் தகவல் பதிவிட்டு இருந்தால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு, தவறான செய்தி கொண்டவீடியோ பார்ப்பதால் பார்வையாளர்களின் நேரம் வீணாகிறது என புகார்கள் எழுந்துள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை யூடியூப் (YouTube) நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தவறான தகவல் கொண்ட தலைப்புகள், புகைப்படங்கள் கொண்ட வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய விதிகளின்படி, கிரியேட்டர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும், தங்கள் வீடியோக்களை சரிசெய்ய யூடியூப் நிறுவனம் நேரம் கொடுக்கிறது. சரி செய்யவில்லையெனில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான கிளிக்பைட்டின் சிக்கல்களைத் தீர்க்க யூடியூப் நிறுவனம் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக இது போன்ற சில அறிவுரைகளை தனது பயனர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்த முறை யூடியூப் தளம் கடுமையான நடவடிக்கை எடுக்கபோவதாக முடிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்