யூடியூப்-இன் சிஇஓ சூசன் வோஜ்சிக்கி பதவி விலகல்; நீல் மோகன் பொறுப்பேற்கிறார்.!
யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) சூசன் வோஜ்சிக்கி, பதவி விலகுகிறார், புதிய சிஇஓ ஆக நீல் மோகன் பொறுப்பேற்க உள்ளார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிக்கி, தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனது குடும்பம், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட சில திட்டங்களை கருத்தில் கொண்டு என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக இந்த சிஇஓ பொறுப்பில் இருந்து பின் வாங்குவதாக சூசன் வோஜ்சிக்கி கூறினார்.
யூடியூப்-இன் நீண்டகால தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருக்கும் நீல் மோகன் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று அவர் மேலும் கூறினார். 25 ஆண்டுகளாக கூகுள் ஊழியர்களில் ஒருவராக இருக்கும் சூசன் வோஜ்சிக்கி, தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு நீல் மோகன் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய-அமெரிக்கரான மோகன் ஆக்சென்ச்சர் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் இதற்கு முன்பு பணிபுரிந்துள்ளார், மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக YouTube இன் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்துள்ளார். இங்கு அவர் யூடியூப் ஷார்ட்ஸ்(Shorts) வீடியோக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.