pakistan [file image]
பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள்.
அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடலாம் என மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர். ரயில் வந்த பிறகு தன்னுடைய பைக்கில் ஆக்ஸிலேட்டரை திருக்கி ரயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்கள்.
இதனை அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகவும் பதிவு செய்தார். ஓட்டும் ரயில் எங்கே நிற்க போகிறது என விளையாட்டாக அந்த இளைஞர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருந்த சூழலில், திடீரென ரயில் நின்றது . நின்றவுடன் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு ரயிலில் இருந்து கீழே இறங்கிய சிலர் இளைஞர்களை தாக்கி இது என்ன செயல் என்பது போல கூறி தாக்கினார்கள். இதனை பார்த்த இளைஞர்கள் தெறித்து ஓடினார்கள். பிறகு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த அந்த பைக்கையும் ரயிலில் ஏற்றினார்கள். ரயிலும் அதன் பிறகு கிளம்பியது. பைக் போன கோபத்தில் கீழே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கற்களை கொண்டு ரயில் பெட்டிகள் மீதும் வீசினார்கள்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், சம்பவம் இவ்வளவு தீவிரமாக இருந்தபோதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைக்காக ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…