கொரோனாவை விட கொடிய X.! 5 கோடி உயிர்களை பறிக்கும்.! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்.!
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட் 19 ) கிட்டத்தட்ட 2 வருடங்கள் உலக நாட்டையே ஆட்டிப்படைத்தது என்று கூறலாம். இன்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சில நாடுகள் பொருளாதார ரீதியில் தவித்து வரும் சூழலை காண்கிறோம்.
தற்போது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் உரிய தடுப்பூசி வழங்கப்பட்டு பெரும் தொற்று தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆராய்ச்சியாளர்கள் குழு தற்போது புது வைரசை கண்டுபிடித்துள்ளதாகவும், அதன் தாக்கம் கோவிட் 19ஐ விட அதிகமாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) வைரஸ் எக்ஸ் (X) என்று பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறுகையில், இந்த X வைரஸானது , கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது. ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்களை உள்ளடக்கிய 25 வைரஸ் குடும்பங்களை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட X வைரஸ் கோவிட் தொற்றை போலவே உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த X வைரஸானது மரபுவழி நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது ஒரு ஆர்என்ஏ வைரஸாக இருக்கலாம் எனவும், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றானது கோவிட்19 போல உலகளாவிய நோய் கண்காணிப்பை அமல்படுத்தும் சூழல் ஏற்படும் என்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த X வைரஸை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு பின்பற்றிய அதே கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு உத்திகளை மீண்டும் அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், இந்த வைரஸ் கொரோனாவை விட 20மடங்கு ஆபத்தானது என்றும், இந்த வைரஸ் வெளி உலகத்திற்கு பரவினால் இதன் மூலம் சுமார் 50 மில்லியன் (5 கோடி) இறப்புகள் எழக்கூடும் என்றும் இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் தெரிவித்துள்ளார்.