மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!
12 நாட்களுக்கு பிறகு வெளி உலகிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் ஐஎஸ்எஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்று எதிர்பாராத விதமாக 9 மாதங்கள் அங்கு சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 20 அன்று பூமிக்குத் திரும்பினார்கள்.
இருப்பினும், நீண்ட மாதங்களாக அவர்கள் விண்வெளியில் இருந்த காரணத்தால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்ப அவர்களுடைய உடல் நிலை மாறவேண்டும் என்பதால் அதனை சரிசெய்ய உதவும் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ், ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சூழலில். சுனிதா வில்லியம்ஸ் தனது சர்வதேச விண்வெளி நிலைய (ISS) அனுபவங்களைப் பற்றி மார்ச் 31 அன்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் (Johnson Space Center) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியவாதவது “நாங்கள் அறிவியல் சோதனைகள் எங்களைச் சுற்றி நடப்பதை விண்வெளியில் பார்த்தோம். விண்வெளியில் வாழ்வது என்பது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் சுவாரஸ்யமானது. புவியீர்ப்பு இல்லாத சூழலில் அன்றாட பணிகளை செய்வது முதல், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பங்களிப்பது வரை, இது ஒரு தனித்துவமான அனுபவம்.
நாங்கள் விண்வெளியில் இருக்கும்போது, பூமியை வெளியிலிருந்து பார்க்கிறோம். அங்கு எல்லைகள் தெரிவதில்லை, மனிதர்கள் ஒரே கிரகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. அங்கு இருந்தபோது எங்களுக்கு எப்போது திரும்புவோம் என்று தெரியாதது. அது தான் எங்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்தது. எனவே, இதன் காரணாமாக நாங்கள் இதனை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருந்தோம்.
அந்த யோசனை ஒரு பக்கம் இருந்தாலும், நாங்கள் எங்கள் பணிகளை தொடர்ந்து செய்தோம். நாங்கள் அங்கு செய்த சோதனைகள் பூமியில் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். நான் தினமும் உடற்பயிற்சி செய்தேன் – டிரெட்மில்லில் ஓடினேன், சைக்கிள் மிதித்தேன், எடை தூக்கினேன் – இது உடலை பலமாக வைத்திருக்க உதவியது.இந்த பயணம் திட்டமிடப்படாதது என்றாலும், அதை ஒரு வாய்ப்பாக எடுத்து எங்கள் பணியை சிறப்பாக செய்தோம்” எனவும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஸ்டார்லைனரில் (விண்வெளி) ISS-க்கு செல்வீர்களா? கேள்விக்கு பதிலளித்த சுனிதா, “நிச்சயமாக, இது மிகவும் திறமையான விண்கலம்” என்று பதிலளித்தார். ஆனால், அதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில், தங்கள் பணியை வெற்றிகரமாக்க உதவிய நாசா குழுக்களுக்கு அவர் நன்றியையும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!
April 2, 2025
‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!
April 2, 2025