H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு H1B விசாவில் மாற்றம் வருமோ என்ற பதற்றம் அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

H1B Visa - Donald trump

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த நாளை எதிர்நோக்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர் என பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை இனி அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்  என்பதும், அமெரிக்க குடியேற்ற விதிமுறைகளில் (விசா) முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதும் தான். இதனால் அவர் டிரம்ப் பதவி ஏற்புக்கு முன்னரே சிலரது அமெரிக்க வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிபிசி செய்தி நிறுவனத்திடம் அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு நபர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, ” H-1B விசாக்களின் மீது தற்போது எழுந்துள்ள பல்வேறு கவலைகள், அங்கு வசிக்கும் இந்தியர்களை சற்று பதற்றமடைய வைத்துள்ளது. இந்த  மாற்றத்தை கருத்தில் கொண்டு நான் எனது பாதையை எதிர்கால பயணத்தை நிறுத்த முடியாது.  இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வரும் அதனை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.” என டிரம்ப் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஹைதிராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர் பேசுகையில், “நான் டிசம்பர் 2024-ல் அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு நான் ஏற்கனவே பார்த்திருந்த வேலையை விட்டுவிட்டேன். இருந்தும் எனக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. பிறகு தான் அங்குள்ள விசா நடைமுறையில் மாற்றம் வரப்போகிறது என்பதை உணர்ந்தேன். ” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்