உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: சிங்கப்பூர் முதலிடம்… இந்தியாவுக்கு எந்த இடம்?

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் கொண்டு, 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டியலில், அமெரிக்காவுக்கு 8வது இடமும், 58 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல செனகல் மற்றும் தஜிகிஸ்தானுடன் இந்தியா 82வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் 100-வது இடத்திலும் உள்ளது.
2024க்கான முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு:
- சிங்கப்பூர் (195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்)
- பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் (192 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்)
- ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, சுவீடன் (191 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்)
- பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் (190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்)
- ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த குடிமக்கள் (189 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்)
- கிரீஸ் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த மக்கள்188 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
- கனடா, செக்கியா, ஹங்கேரி மற்றும் மால்டா ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
- உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா 8வது இடத்தில் உள்ளது, மேலும் இது 182 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல அனுமதிக்கிறது.
- எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் குடிமக்களுக்கு 185 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்
- ஐஸ்லாந்து, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா 184 நாடுகளுக்கு பயணம் செய்ய விசா இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.