அதிசயம்..! 3 பேரின் DNA உடன் பிறந்த முதல் குழந்தை..!

NewBornBaby

இங்கிலாந்தில் 3 பேரின் டிஎன்ஏவுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இங்கிலாந்தில் முதன்முதலாக ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி மூலம் மூன்று பேரின் டிஎன்ஏவுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. கருக்களை உருவாக்குவதற்கான சிறப்பு ஐவிஎஃப் (IVF) நுட்பத்தைப்  பயன்படுத்தியும், மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் மூலமாகவும் இந்த குழந்தை பிறந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் என்பது ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பமாகும். இது குழந்தைகளுக்கு பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் முயற்சியைக் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தசெயல்முறையில், 99.8% DNA இரண்டு குழந்தையின் பெற்றோரிடமிருந்தும் மீதமுள்ள 0.1% DNA ஒரு பெண் நன்கொடையாளரிடமிருந்து வந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் குழந்தையை உருவாக்கும் முதல் நாடு இங்கிலாந்து அல்ல. முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மெக்சிகோவில் இதே போல ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்