உலக மக்கள்தொகை தினம் உருவான விதம் !

உலக மக்கள் தொகை தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மக்கள்தொகை வளர்ச்சி என்பது கி.பி 1650-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமாக வளரத் தொடங்கியது.1840-ம் ஆண்டு மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது.அதன் பின்னர் 1927 -ம் ஆண்டு மக்கள் தொகை 200 கோடியை ஆனது. ஆனால் அடுத்த 33 வருடத்தில் 1960 -ல் மக்கள் தொகை 300 கோடி மக்கள் தொகையை எட்டியது.
அதன் பின் 1999 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடி தொட்டது. 39 வருடத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து என குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்தது.
தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி எனவும் ஐ.நா.வின் அறிக்கை படி 2030-ல் 8.6 கோடியை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை 8.3 உயர்ந்து வருகிறது.
உலக மக்கள் தொகை சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை 140 கோடி மற்றும் 130 கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 -ம் ஆண்டு இந்தியா சீனாவை விட மக்கள் தொகையில் அதிகமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025