உலக மலேரியா தினம் 2023: மலேரியாவின் வரலாறு மற்றும் தடுக்கும் வழிமுறைகள் இதோ..!

Default Image

உலக மக்கள் அனைவராலும் இன்று உலக மலேரியா தினம் (ஏப்ரல் 25) கொண்டாடப்படுகிறது. 

உலக மலேரியா தினம் 2023:

உலக மலேரியா தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. மலேரியா நோயின் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் (300.3 கோடி) மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007-இல் ஏப்ரல் 25ம் தேதியை மலேரியா நாளாக அறிவித்தது.

வரலாறு :

ஆப்பிரிக்கா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுகூறும் ஆப்பிரிக்கா மலேரியா தினத்திலிருந்து உலக மலேரியா தினம் உருவானது . இது 2001 முதல் ஆப்பிரிக்க அரசாங்கங்களால் அனுசரிக்கப்பட்டது. மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆப்பிரிக்க நாடுகளில் அதன் இறப்பைக் குறைப்பதற்கும் இலக்குகாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு உலக மலேரியா தினமும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டும் மலேரியா தினத்தை கொண்டாடும் வகையில் ‘பூஜ்ஜிய மலேரியாவை வழங்குவதற்கான நேரம்: முதலீடு, புதுமை, செயல்படுத்துதல்’ என்ற சிறப்பு கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது.

பரவும் முறை :

மலேரியா நோய் ஆனது ‘அனாபிலிஸ்’ (Anopheles) என்ற கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அல்லது ஈரப்பதம் இருக்கும் இடங்களில் ​​மலேரியா கொசுக்கள் பெருகி பலவித நோய்களைப் பரப்புகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, குளிர், சோர்வு, தலைசுற்றல் மற்றும் வயிற்று வலி ஆகியவை மலேரியாவின் பொதுவான அறிகுறிகளாகும். பொதுவாக மலேரியா இரண்டு வாரங்களில் குணமாகிவிடும், ஆனால், உடனடி சிகிச்சை எடுக்காமல் அதனைப் புறக்கணிப்பது நோயாளியின் உயிருக்கு மிகவும் ஆபத்தானது. மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தடுக்கும் முறை :

மலேரியாவை தவிர்க்க முதலில் கொசுக்களை தவிர்க்க வேண்டும். அதனால், கொசுக்கள் அதிகமாக இருக்கும் போது கொசுவலைக்குள் தூங்கவேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கொசுக்கள் உள்ளே வராதவாறு வலைகளை வைத்து மூடவேண்டும். இரவில் தூங்கும் போது முழு கை ஆடைகளை அணிந்து தூங்க வேண்டும். மேலும், கொசுவத்திகள் போன்ற கொசு விரட்டிகளை பயன்படுத்தவும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்