கேசினோ மூலம் 4 மில்லியன் டாலரை வென்ற நபர்..! மாரடைப்பு வந்து மறுநொடி இறந்த பரிதாபம்!!

MBS Casino Heart Attack Incident

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோ (Marina Bay Sands Casino-MBS Casino) என்ற இடத்தில் கேசினோ மூலம் 4 மில்லியன் டாலர் ஜாக்பாட் மூலம் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பெற்ற ஆனந்த அதிரிச்சியில் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக சிறுது நேரத்தில் இறந்தார். அந்த கேசினோவுக்கு தினசரி வாடிக்கையாளர் அடையாளம் தெரியாத அந்த நபர், அன்றைய நாளின் அதிக பங்குகள் கொண்ட அவர் விளையாடி இருக்கிறார். அப்போது தான் இந்த ஜாக்பாட்டை அடித்திருக்கிறார்.

அந்த இன்ப அதிரிச்சியின் மூலம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட கேசினோ ஊழியர்களும், அவசர மருத்துவ சேவைகளும் மயங்கிய அந்த நபருக்கு விரைவாக முதலுதவி செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்த போதிலும், அவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதன்முலம், சோகத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோ பதிவானது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.  இதன்முலம், அதிக சோகம் மட்டும் அல்லாமல் அதிக சந்தோசபடுவதன் மூலமாகவும் மாரடைப்பு ஏற்பட்டு இப்படி உயிரிழப்பும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்