‘ரோபோக்களுடன் பெண்கள் உடலுறவை விரும்புவார்கள்’! வெளியான அதிர்ச்சி தகவல்!
வரும் காலங்களில் பெண்கள், ஆண்களை விட ரோபோக்களை அதிகம் காதலிக்க விரும்புவார்கள் என டாக்டர் இயன் பியர்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன் : மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட், ஒரு பெண்ணை காதலிப்பதை நாம் எந்திரன் படத்தில் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
ஆனால், நம்மை சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்த கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI எனப்படும் சாதனம் கோடி கட்டி பறக்கிறது. அந்த AI-யால் செய்ய முடியாதது ஒன்றுமே கிடையாது என அதனை உருவாக்கும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இதற்காக தனி பாடப்பிரிவுகளும், கோர்ஸ்களும் வந்துவிட்டது. இப்படி இருக்கையில் தான் அதிர்ச்சியான ஒரு தகவலை எதிர்கால நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் வரும் காலங்களில், ஆண்களை விட ரோபோட்டுடனே பெண்கள் உடலுறவு கொள்வதற்கு விரும்புவார்கள் என அவர் கூறியிருக்கிறார்.
AI தொழில்நுட்பம் வருவதற்கு முன்னதாகவே இந்த ரோபோட்டின் ஆராய்ச்சிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட்டது. வெளி நாடுகளில் கூட, தங்களுடைய விட்டு வேலைகளை செய்ய ரோபோவை பயன்படுத்தி வருகிறார்கள் என நாம் கேட்டிருப்போம்.
ஆனால், தற்போது AI கொண்டு ஒரு ரோபோட்டை உருவாக்குவதால் அது வரும் ஆண்டுகளில் ரோபோவின் பயன்பாடு அதிகமாகும் எனவும், பெண்கள் அதிகமாக ரோபோக்களை காதலித்து ரோபோக்கள் உடனே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள் எனவும் இயன் பியர்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயன் பியர்சன் பிரிட்டிஷ் நாளிதழான தி சன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர் பேசியதாவது, “இன்னும் 10 ஆண்டுகளில் பெண்கள் ஆண்களை தவிர்த்து விட்டு ரோபோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
2025 ஆம் ஆண்டுக்குள் பணக்கார குடும்பங்களில் ரோபோ செக்ஸ் கலாச்சாரம் உருவாகி விடும். மேலும், 2050-ம் ஆண்டுகளில் ரோபோ செக்ஸ் சாதாரண ஒரு உடலுறவு போல பழகிவிடும். மேலும், ரோபோக்கள் மனிதர்களுடன் புதுவிதமான அன்பை உருவாக்கும்.
இது அப்போது என்னதான் நடைமுறையில் இருந்தாலும், பாலுணர்வு கொண்ட உடலுறவுக்கு அப்போது மதிப்பு இருக்கும்”, என டாக்டர் இயன் பியர்சன் கூறியிருக்கிறார். இவர் கணித்து இப்படி பேசியதை பலரும் நிராகரித்தாலும், ஒரு சிலர் கூறுகையில்,’ஆபாச ரீதியாக விற்கப்படும் பொம்மைகள் (Sex Toys) போன்றவற்றின் தேவைக் குறையலாம் எனவும் பாலியல் தேவைக்கென இருக்கும் தொழில்கள் இதனால் குறையலாம் அதனால் அவரது கணிப்பு சரிதான்’ எனவும் கூறிவருகின்றனர்.