முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை தண்டனை!
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் மனைவி தன்னை வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக திட்டியதாக வழக்கு தொடுத்துள்ளார்.அவரின் மனைவியும் அவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அவரின் முன்னாள் மனைவி அவரை கடுமையாக திட்டிவந்துள்ளார்.
அந்த பெண் அவரை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள் அவரை தூங்கவிடாமல் செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தொடர்ந்து அந்த பெண் அவரை முட்டாள் என்றும் பிசாசு என்றும் வாட்ஸ் அப்பில் திட்டியுள்ளார்.
இவளை ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய கணவர் அந்த பெண் மீது வழக்கு தொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் இந்த மாதிரி திட்டி மெசேஜ் அனுப்ப கூடாது என்று அந்த பெண்ணை திட்டியுள்ளார்.