விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!
ரஷ்யா உடன் நடைபெற்று வரும் போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், போர் நிறுத்தம் செய்யப்படுவதற்காக கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற காரணத்தால் போர் நிறுத்தம் பற்றி பேசமுடியாத சூழல் ஏற்பட்டது.
அதன்பிறகு அவர் டொனால்ட் டிரம்ப்பை விமர்சனம் செய்ய அதற்கு பதில் அளிக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் ஜெலன்ஸ்கியை விமர்சித்து பேசி வந்தனர். பிறகு, உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவி நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து, அமெரிக்கா ஆதரவின்றி உக்ரைனால் ரஷ்யாவின் போரை சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் வேறு வழியின்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்து பேசி வந்ததையும் நிறுத்தினார்.
அத்துடன் அமெரிக்காவுக்கு கீழ் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். அடுத்ததாக அமெரிக்கா பற்றி பெருமையாக பேசி வந்த நிலையில், திடீரென உக்ரைன், போர் ஆரம்பித்த நாள் முதலே போரில் இருந்து விலகி அமைதியை தான் நாடுகிறது. இந்த போர் இன்னும் தொடர்வதற்கு ஒரே காரணம் ரஷ்யா தான். இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என போர் நிறுத்தத்தை விரும்புவதாக அறிவித்தார்.
பேச்சுவார்த்தை
இவர் இப்படி கூறியவுடன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நேற்று சவுதி அரேபியாவில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை ஜெட்டாவில் நடைபெற்றது. அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ மற்றும், பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் உடனடியாக வெளியாகாமல் இருந்தது.
இந்த சூழலில், இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கவுள்ளதாக கூறபடுகிறது. அமெரிக்கா, உக்ரைனுக்கு 30 நாட்கள் போர்நிறுத்தத்திற்கான ஒரு திட்டத்தை கொண்டுவரலாம் என கூறிய நிலையில். அதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடன் பேசி விரைவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர ஜெலன்ஸ்கி கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் அழைப்பு
போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் இந்த முறை நடைபெறவில்லை பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது என்றால் ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தெளிவாக முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025