இந்தியாவில் டெஸ்லா வா..? பிரதமர் மோடியை பின்தொடர்ந்து ‘ஹிண்ட் ‘கொடுத்த எலான் மஸ்க்.!
பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்கிறார் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.
டிவிட்டர் தலைவரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடரத் தொடங்கினார். மஸ்க் இதுவரை 194 பேரை பின் தொடர்ந்திருந்த நிலையில், இன்று 195-வது ஆளாக பிரதமர் மோடியை பின் தொடர்ந்துள்ளார். டிவிட்டரில் 134.3 மில்லியனுடன் அதிகம் பாலோவர்ஸ்களை கொண்ட நபர் எலான் மஸ்க் தான்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 87.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், ட்விட்டரில் அதிகம் பின்தொடரும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.
Andy Vermaut shares:Elon Musk Starts Following PM Modi, Users Ask If Tesla is Coming To India: The news about Elon Musk’s follower update was also posted on Twitter by “Elon Alerts”, which monitors the Tesla chief’s account activity. https://t.co/yeFRADvLKm Thank you. pic.twitter.com/bphtFj73UO
— Andy Vermaut (@AndyVermaut) April 10, 2023
எனவே, திடீரென பிரதமர் மோடியை எலான் மஸ்க் பின்தொடர்ந்துள்ளதால் இதனை பார்த்த சில பயனர்கள் “மஸ்கின் டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். டெஸ்லா என்பது எலான் மஸ்க் சொந்தமாக வைத்திருக்கும் கார் கம்பெனியின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
@elonmusk follows @narendramodi or not; he’ll still charge the same import duty on $TSLA until Mr. Alien decides to start a @Tesla factory in ???????? . ‘Made in China’ is not Modi’s favourites while Musk needs some serious investment plans in ???????? after lithium reserves have been found!
— Preyansh (@thepreyansh) April 10, 2023