9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?

நீண்ட காலமாக விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்புபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunita Williams health

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள்.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக அவர்கள் சென்றிருந்த நிலையில், திடீரென அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டடு 9 மாதங்களுக்கு மேலாகியும் சிக்கியிருந்தார்கள்.

அங்கு சிக்கியிருந்த அவர்கள் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு  நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.  எனவே, கடந்த மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டது. அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷ்யா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் சென்ற அந்த விண்கலம் , சர்வதேச விண்வெளி மையத்தை இந்திய நேரடி இன்று (மார்ச் 16) காலை 8 மணியளவில் சென்றடைந்தது. இதனையடுத்து, தற்போது ஃபால்கான் 9 விண்கலத்தில் இருந்து க்ரூ டிராகன் தனியாக பிரிந்து சென்றது என ஸ்பேஸ் எக்ஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்புக்குழுவினர் சென்ற நாசாவின் crew-10 பயணித்த ஸ்பேஸ் டிராகன் ஓடம் இந்திய நேரப்படி 9.37 மணிக்கு வெற்றிகரமாக ISS உடன் இணைந்த நிலையில், வரும் 19ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து விண்கலமானது தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், 9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருக்கு உடல்நல குறைவு ஏற்படுமா? என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

நாசாவின் முன்னாள் முதன்மை மருத்துவ அதிகாரி  டாக்டர் ஜான் சார்லஸ் (Dr. John Charles) விண்வெளி வாழ்க்கையின் உடல்நிலை பாதிப்புகளைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  நீண்ட கால விண்வெளி பயணத்தில் தசை மற்றும் எலும்பு இழப்பு (எலும்பில் உள்ள தாதுக்கள் (Bone Mineral Density) குறைந்து, எலும்புகள் பலவீனமடையும்) என தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் சொன்ன தகவல்கள்..

அதைப்போல இதய செயல்பாடு குறைவு (இதயத்திற்கு தேவையான ரத்த அளவு உடலின் பிற பாகங்களுக்கு பம்ப் செய்ய முடியாத ஒரு நிலை) ஏற்படலாம் எனவும், இதன் விளைவாக உடலின் பிற பாகங்களுக்கு போதுமான ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் எனவும் டாக்டர் ஜான் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

நாசாவில் ஊட்டச்சத்து உயிர்வேதியியலாளராக இருந்த டாக்டர் ஸ்காட் ஸ்மித் (Dr. Scott Smith) ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” விண்வெளி பயணிகளின் ஊட்டச்சத்து தேவைகள் மிகவும் முக்கியமான ஒன்று. இது நான் அவர்களுடைய உடல்நிலை மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்தபோது எனக்கு தெரியவந்தது. விண்வெளி வீரர்கள் நீண்ட காலமாக விண்வெளியில் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதில் இருந்து உடனடியாக மீண்டு வரமுடியாது தேவையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து இருக்கும் விஷயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

நாசா : மேலும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்பும் போது எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமையை இழக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளது. எனவே, அவர்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் இதில் இருந்து மீண்டு வரமுடியும் எனவும் நாசா தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அதைப்போல, விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பின் “குழந்தை பாதங்கள்” என்று சொல்லப்படும் நிலைமை காரணமாக அவர்கள் வழக்கம் போல் நடக்க சிரமப்படலாம் என்று கூறப்படுகிறது. “குழந்தை பாதங்கள்” என்றால் குழந்தை நடப்பதற்கு முதலில் கொஞ்சம் திணறி நடக்கும் அதைப்போலவே தான் அவர்களுக்கும் பூமிக்கு திரும்பியபின் நடக்க சிரமப்படுவார்கள்.

ஏனென்றால், 9 மாதங்களுக்கு மேலாக அவரகள் விண்வெளியில் நடந்திருக்க மாட்டார்கள். எனவே, வழக்கமான முறையில் அவர்கள் நடக்கவேண்டும் என்றால் பூமிக்கு திரும்பி அதற்கு கொஞ்சம் பயிற்சி எடுத்தால் மட்டும் தான் நடக்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
narendra modi s. regupathy
TamannaahBhatia
BJP MLA Vanathi Srinivasan - VCK Leader Thirumavalavan
sengottaiyan edappadi palanisamy
moeen ali ms dhoni
pm modi