ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று, அதன் சுற்றளவு குறைக்கப்பட்டு, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர் நிலவை சுற்றிவரும் நிலையில், அதன் சுற்றி வரும் பாதையின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்படுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி, லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா-25ஐ விண்ணில் செலுத்தியுள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25யானது, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் எனவும் திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், கடந்த 17-ந்தேதி லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப்பதையைக் குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லூனா -25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்றுவட்டாபாதையை குறைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, இந்த அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக, ஏற்கனவே சுற்றி வந்த நிலவின் சுற்றுவட்ட பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…