47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?
அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருவதற்கான காரணம் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 230 எலெக்ட்ரல் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். மேலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 205 எலெக்ட்ரல் வாக்குகள் பெற்று பின்னிலையில் இருந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்த வரையில் 538 மாகாணங்களில் 270 மாகாணங்களை வெல்பவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி இருந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் முன்னைலைப் பெற்று வருகிறார். இதற்கான காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
டிரம்ப் முன்னிலையின் காரணம் :
அமெரிக்காவில், இது வரை எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் சிறு மாகாணங்களின் வாக்குகள் ஆகும் அதாவது சிறு சிறு மாவட்டங்கள் ஆகும். அந்த சிறு மாவட்டங்களில் தான் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அந்த சிறு மாகாணங்களில் சிறிய அளவிலான எலெக்ட்ரல் வாக்குகளே உள்ளது.
அது போன்ற சின்ன மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். மேலும், அவர் வெற்றிப் பெற்ற மாகாணங்களும் சிறிய அளவிலான எலக்ட்ரல் வாக்குகள் அடங்கியதாகும். அதே போல கமலா ஹாரிஸ் தற்போது முன்னிலைப் பெற்று வரும் மாகாணங்கள் அனைத்தும் பெரிய அளவிலான வாக்குகளும், பெரிய அளவிலான எலக்ட்ரல் வாக்குகளும் அடங்கியதாகும்.
அதன்படி, தற்போது பெரிய மாகாணமான ஃப்ளோரிடாவையும் கைப்பற்றியுள்ளார் கமலா ஹாரிஸ். மேலும், கமலா ஹாரிஸ் கைப்பற்றி இருக்கும் மாகாணங்கள் அனைத்தும் பெரிய மாகாணங்கள் ஆகும்.
அதே போல ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் முக்கிய மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், டிரம்புக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.