எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!
அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் “டிபார்ட்மெண்ட் ஆஃப் கவர்ன்மெண்ட் எஃபிஷியன்சி” (DOGE) என்ற துறையை தலைமையேற்று, அரசு செலவுகளைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, எலான் மஸ்க் விரைவில் இந்த பதவியிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, எலான் மஸ்க் ஒரு “சிறப்பு அரசு ஊழியர்”என்ற முறையில் பணியாற்றுகிறார். இந்த பதவியில் உள்ளவர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 130 நாட்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்ட விதிமுறை அமெரிக்காவில் உள்ளது. இதன்படி, ட்ரம்பின் பதவியேற்பு நாளான ஜனவரி 20ம் தேதி முதல் கணக்கிட்டால், மஸ்கின் பதவிக் காலம் மே மாத இறுதியில் முடிவடையும்.
அதனால், அவர் தனது பணியை முடித்துக்கொண்டு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற தனது நிறுவனங்களை நிர்வகிக்க திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களுடனான உரையாடலின் போது,”எலோன் மஸ்க் அற்புதமானவ, அவர் ஒரு தேசபக்தர். எனக்கு புத்திசாலி மக்களை பிடிக்கும், அவர் ஒரு புத்திசாலி நபர்.
எனக்கு தனிப்பட்ட முறையில் அவரைப் பிடிக்கும். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் அவசரப்படவில்லை. ஆனால், ‘எலோன் மஸ்க் வெளியேற வேண்டிய ஒரு தருணம் வரும்’ என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். பத்திரிகையாளர் அவர் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று கேட்டதற்கு, டிரம்ப், “சில மாதங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
பின்னர் டிரம்பிடம், எலான் மஸ்க்கை நீண்ட காலம் அரசு பணியில் வைத்திருக்க, அவருக்கு வேறு ஒரு பதவை ஒதுக்குவீர்களா என்று கேட்டதற்கு, ஆம், “நான் விரும்புகிறேன். எலான் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவருக்கு நடத்துவதற்கு பல நிறுவனங்களும் உள்ளன,” என்று டிரம்ப் கூறினார். இருப்பினும், “எலான் முடிந்தவரை நீண்ட காலம் தங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று கூறினார்.
President Trump on Elon Musk and @DOGE: “I want Elon to stay as long as possible”
— America (@america) April 4, 2025
இதற்கிடையில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் நேற்று எலான் மஸ்க் DOGE-இல் தனது தற்போதைய பொறுப்பை விட்டு வெளியேறிய பிறகும் டிரம்பின் “நண்பராகவும் ஆலோசகராகவும்” இருப்பார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.