ஹவாய் தீவில் காட்டு தீ.! 36 பேர் உயிரிழப்பு… 200 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்.!
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாய் மாகாணத்தில் உள்ள 8 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாக உள்ள மவுயி தீவில் தான் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது பெரும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த காட்டுத்தீயானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பரவியதால் அங்கும் பல்வேறு குடியிருப்புகள் தீயில் கருகின. இதனால் அருகில் உள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் 200 ஏக்கருக்கு அதிகமான காடுகள் காட்டுத் தீயினால் எரிந்து நாசம் அடைந்துள்ளன எனவும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடு உடைமைகளை இழந்து தீவில் சிக்கியுள்ளனர். 13 ஆயிரம் பேர் அந்த தீவில் இருந்து வெளியேறி உள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தினால் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த காட்டுத்தீய அணைக்க இணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். மீட்புப்பணியில், அமெரிக்க விமானப்படை, கப்பற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.