Categories: உலகம்

சிலியில் பரவிய காட்டுத்தீ… இதுவரை 112 பேர் பலி.!

Published by
மணிகண்டன்

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிலி நாட்டில் மத்திய பகுதியில் வினா டெல் மார் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய காட்டுத்தீ இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரரகள  கடுமையாக போராடி வருகின்றனர்.

சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.!

காட்டுத்தீ அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 8000 ஹெக்டேர் அதாவது 30 சதுர மைல் தூரம் அளவுக்கு காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 1100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை கட்டுக்குள் கொண்டு வர எதுவாக பொதுமக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வினா டெல் மார் நகரில், 1931 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் காட்டு தீயால் முற்றிலும் சேதமாகியுள்ளது. இந்த காட்டுத்தீயால் இதுவரை குறைந்தது 1,600 பேர் வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  பலர் காட்டுத்தீ காரணமாக தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டும் உள்ளனர்.அப்படி இதுவரை 200 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, சிலியின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் குயில்பே தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நகருக்கு விமானம் மூலம் சென்றார், அவர் முதற்கட்டமாக தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்ததாக தெரிவித்து இருந்தார். அதனை அடுத்து வெளியான தகவலின்படி அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கையானது 112ஆக உயர்ந்துள்ளளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி இன்னும் தொடர்ந்து வருவதால், உயிர்பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது .

வினா டெல் மார் மற்றும் பிற பாதிக்கப்பட்ட நகரங்கள் அமைந்துள்ள வால்பரைசோ மாகாணத்தின்  ஆளுநர் ரோட்ரிகோ முண்டாகா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், சில தீ விபத்துகள் வேண்டுமென்றே ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த காட்டுத்தீயானது நான்கு பக்கங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் பரவ தொடங்கியுள்ளது. இந்த காட்டு தீ இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்த யார் பொறுப்பு என்பதை கண்டறிய கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்றும் ஆவர் கூறினார்.

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

52 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

4 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

1 day ago