சிலியில் பரவிய காட்டுத்தீ… இதுவரை 112 பேர் பலி.!
தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிலி நாட்டில் மத்திய பகுதியில் வினா டெல் மார் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய காட்டுத்தீ இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரரகள கடுமையாக போராடி வருகின்றனர்.
சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.!
காட்டுத்தீ அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 8000 ஹெக்டேர் அதாவது 30 சதுர மைல் தூரம் அளவுக்கு காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 1100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை கட்டுக்குள் கொண்டு வர எதுவாக பொதுமக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வினா டெல் மார் நகரில், 1931 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் காட்டு தீயால் முற்றிலும் சேதமாகியுள்ளது. இந்த காட்டுத்தீயால் இதுவரை குறைந்தது 1,600 பேர் வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காட்டுத்தீ காரணமாக தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டும் உள்ளனர்.அப்படி இதுவரை 200 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, சிலியின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் குயில்பே தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நகருக்கு விமானம் மூலம் சென்றார், அவர் முதற்கட்டமாக தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்ததாக தெரிவித்து இருந்தார். அதனை அடுத்து வெளியான தகவலின்படி அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கையானது 112ஆக உயர்ந்துள்ளளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி இன்னும் தொடர்ந்து வருவதால், உயிர்பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது .
வினா டெல் மார் மற்றும் பிற பாதிக்கப்பட்ட நகரங்கள் அமைந்துள்ள வால்பரைசோ மாகாணத்தின் ஆளுநர் ரோட்ரிகோ முண்டாகா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், சில தீ விபத்துகள் வேண்டுமென்றே ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த காட்டுத்தீயானது நான்கு பக்கங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் பரவ தொடங்கியுள்ளது. இந்த காட்டு தீ இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்த யார் பொறுப்பு என்பதை கண்டறிய கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்றும் ஆவர் கூறினார்.