எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்த கணவர்!கணவரின் உயிரை காப்பாற்றிய மனைவி!
அமெரிக்காவில் உள்ள இண்டியனா பகுதியைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டேன் ஆவார்.இவரது மனைவி அகைமியி சாஸ்டேன்.இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதன் காரணமாக இருவரும் தேனிலவிற்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு செல்ல எண்ணியுள்ளனர்.கடந்த 18-ம் தேதி திட்டமிட்டபடி இருவரும் ஏரிமலை உச்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது எரிமலையை இன்னும் சரியாக பார்க்கவேண்டும் என்று கிளே சாஸ்டேன் எண்ணியுள்ளார்.இதன் காரணமாக தவறிவிழுந்து சுமார் 50 முதல் 70 அடிவரை உள்ள பள்ளத்தில் சிக்கி கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவிக்கு உதவிக்கு அழைக்க யாரும் அங்கு இல்லை.பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தனது கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.பின்னர் இருவரும் எரிமலையை விட்டு வெளியே வந்துள்ளனர்.
மேலும் பள்ளத்தில் விழுந்த கணவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்காக பிராத்தனை செய்ததுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.மேலும் அவர் எரிமலையில் இருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கியாதாகவும் கூறியுள்ளார்.
#NDI Hombre cae dentro de un volcán durante su luna de miel en la isla caribeña de St. Kitts durante experiencia de montañismo. Clay Chastain sobrevivió pero sufrió conmoción cerebral, vértebras quebradas, fractura en el cráneo y pérdida de audición en oído derecho. pic.twitter.com/NGNZKWY0Xt
— Raúl Brindis (@raulbrindis) July 26, 2019