“நாம் ஏன் இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்? அங்கு பணம் இருக்கிறது” – அதிபர் ட்ரம்ப்.!

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க DOGE-இன் $21 மில்லியன் நிதி குறைப்பு முடிவை டொனால்ட் டிரம்ப் ஆதரித்தார்.

Trump -PM MODI

வாசிங்டன் : இந்தியாவில் “வாக்காளர் வாக்குப்பதிவு”-க்காக நியமிக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறையின் (DOGE) முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக கட்டணங்களைக் கருத்தில் கொண்டு அந்த பெரும் நிதி உதவியின் அவசியம் பற்றி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கு நாம் ஏன் ரூ.182 கோடி ($21M)  தர வேண்டும்? வர்களிடம் நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா.

இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது. இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக பணம் வழங்க வேண்டும்?” என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி 17 அன்று, எலோன் மஸ்க் தலைமையிலான DOGE, இந்தியாவில் வாக்களிப்பை விரிவுபடுத்துவதற்காக 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்தது. சமூக வலைத்தளமான X -ல் ஒரு பதிவில், DOGE நிறுவனம் ரத்து செய்த அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தை பட்டியலிட்டது. அதில் இந்தியாவில் வாக்களிப்பதற்கான 21 மில்லியன் அமெரிக்க டாலர்களும் அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்