உலக எய்ட்ஸ் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்..? காரணம் என்ன தெரியுமா ..!!

Default Image

உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் …!!

1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது.

இந்த நாளானது எச்.ஐ.வி பரிசோதனை, நோய் தடுப்பு, அனைவரிடம் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தடுக்க, உலக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இது குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக எய்ட்ஸ் தினம் ஆனது 1987ஆம் ஆண்டு, முதன் முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்டது.

இதன் நோக்கமானது தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் , சர்வதேச நிறுவனங்கள் ,மற்றும் தனிநபர்களுக்கிடையே எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது ஆகும். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளான ஜேம்ஸ் டபிள்யூ.பன் மற்றும் தாமஸ் நெட்டர் என்பவர்களால் உலக எய்ட்ஸ் தினமானது தொடங்கப்பட்டது.

1996 முதல் UNAIDS (எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பு)உலக எய்ட்ஸ் தினத்தை ஒருங்கமைக்கவும் மற்றும் இது பற்றி விளம்பரம் செய்யும் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.இதன்பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிசம்பர் 1ஐ உலக எய்ட்ஸ் தினமாக நவம்பர் 30,2017 அன்று அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட நிலவரப்படி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 38.4 மில்லியன் ஆக இருந்தது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (25.6 மில்லியன்) ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4,139 பேருக்கும் மேலாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கல்வி மற்றும் விழிப்புணர்வு இவைகளால் மட்டுமே எய்ட்ஸ் நோயை தடுக்க முடியும் என்று நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கம்(தீம்),  ‘சமமாக்குதல்(Equalize)’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி எச்.ஐ.வி நோயினால் மக்களிடையே வரும் ஏற்ற தாழ்வுகளை குறைக்கவும், எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழித்து  மக்களை காக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்