Categories: உலகம்

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான வீடியோ காட்சிகள்!!

Published by
பால முருகன்

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார்.

Donald Trump [file image]
அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் நோட்டமிட்டு டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.  மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர் எனவும் தகவல்கள் ஏற்கனவே, வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் (FBI) கொடுத்த தகவலின் படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை 20 வயதுடையவர் என தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள தகவல் ” ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொலை  முயற்சியில் ஈடுபட்டவர்  பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவருக்கு 20 வயது என அடையாளம் கண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த நபர் எதற்காக கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அந்த நபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியா பேரணியில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை நோட்டமிட்டு பேரணி நடைபெறும் இடத்திற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து சுட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago