டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான வீடியோ காட்சிகள்!!
டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் நோட்டமிட்டு டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர் எனவும் தகவல்கள் ஏற்கனவே, வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் (FBI) கொடுத்த தகவலின் படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை 20 வயதுடையவர் என தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள தகவல் ” ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவருக்கு 20 வயது என அடையாளம் கண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
🚨: gunman who attempted to assassinate former President #DonaldTrump , once again, was identified as #ThomasCrooks by FBI. pic.twitter.com/AyRgEOdstM
— Derêka Kay (@DKproduxion) July 14, 2024
மேலும், அந்த நபர் எதற்காக கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அந்த நபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியா பேரணியில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை நோட்டமிட்டு பேரணி நடைபெறும் இடத்திற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து சுட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Footage surfaces of #DonaldTrump’s alleged shooter lying dead on a roof pic.twitter.com/Vx1gKSJyFT
— Virtual Celebrity News Network (@virtualcelebnew) July 14, 2024