சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!
சீனாவில் தற்போது ப்ருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில் முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின.
சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..!
தற்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் தான். இருப்பினும் வழக்கமான பருவகால எண்ணிக்கையை விட சற்று அதிகம். பொதுவாகவே பருவகால சமயத்தில் இம்மாதிரியான சுவாச நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் சீன சுகாதரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் குழந்தைகள் அதிகமாக நிமோனியா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருங்கி வருவதால் இந்த நிமோனியாவால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.