அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு உயர் பொறுப்பு.! யார் இந்த ஆகாஷ் போப்பா?
எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டு துறையில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் அரசாங்க செயல்பாடுகளை நவீனப்படுத்த 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ் போப்பா உள்ளிட்ட ஆறு தொழில்நுட்ப பொறியாளர்களை நியமித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் மஸ்க் மற்றும் பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு அரசியலில் குறைந்த அனுபவம் இருந்தபோதிலும், DOGE சமீபத்தில் பணியமர்த்திய 19 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆறு இளம் பொறியாளர்களில் ஆகாஷ் போப்பாவும் ஒருவர்.
22 வயதே ஆன ஆகாஷ் போப்பா, அரசின் தனி நபர் மேலாண்மை பிரிவில் பணியாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் மிகக் குறைந்த அனுபவமுள்ள இளைஞர்களை நியமிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ் பாபா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். DOGE-இல் சேருவதற்கு முன்பு, ஆகாஷ் போபா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முத்திரையை பதித்தவர். இந்த தகவல் அவரது LinkedIn கணக்கின்படி உள்ளது.
DOGE-இல் இணைவதற்கு முன்பு, 22 வயதான ஆகாஷ் பாபா, யூசி பெர்க்லியின் மேலாண்மை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் (MET) திட்டத்தில் பயின்றார். இந்த துறை எதிர்கால தொழில்நுட்பத் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் மெட்டா, பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். அங்கு அவர் AI, அறிக்கை ஆய்வு மற்றும் நிதி மாடலிங் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.