வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெஃப் ஜியன்ட்ஸ், யார்?

Default Image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஜெஃப் ஜியன்ட்ஸ், யார்? முக்கிய விஷயங்களை பார்க்கலாம்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக ஜெஃப் ஜியன்ட்ஸை அறிவித்தார். ஜெஃப் ஜியன்ட்ஸ், பைடன் நிர்வாகத்தில் கோவிட் -19 குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். மேலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் ஒரு பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இரண்டு வருடங்களாக நிர்வாகத்தில் இருக்கும் ரான் க்ளெய்னுக்குப் பிறகு தற்போது ஜெஃப் ஜியன்ட்ஸ், தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். க்ளெய்னின் அயராத உழைப்பிற்காக பைடன் அவரைப் பாராட்டினார். மேலும் ஜெஃப், ஒரு புத்திசாலித்தனமான, நிலையான தலைமைத்துவத்துடன் மக்களுக்காக சேவை செய்ய ரானின், பணியை தொடர்வார் என்று பைடன் கூறினார்.

தலைமைப் பணியாளர்களின் பணி என்பது, ஜனாதிபதிக்கான அணுகலை நிர்வகிப்பது, அவரது நிகழ்ச்சி நிரலை அமைப்பது, அரசியல் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது, ஒரு நிலையான மேலாளராக செயல்படுவது மற்றும் யோசனைகள் கூறும் குழுவாக செயல்படுவது போன்ற அனைத்தையும் நிர்வகிப்பது போன்றவற்றை குறிக்கிறது.

ஜியன்ட்ஸ்,கல்வி மற்றும் சுகாதார ஆலோசனை நிறுவனமான ஆலோசனை(Advisory Board) வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். அவர் குழந்தைகள் தேசிய மருத்துவ மையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும், இருந்திருக்கிறார்.

ஜியன்ட்ஸ் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய ஒரு பெரிய தடுப்பூசி திட்டத்தால், 65% க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிவகுத்தது. பொதுச்சேவை மற்றும் வணிக பின்னணியைக் கொண்ட ஜியன்ட்ஸ், பணவீக்கக் குறைப்புச் சட்டம் உட்பட உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் வேலைகள் சட்டம் போன்றவற்றிற்கு தலைமைப் பணியாளர் சேவையில் பைடனின் அடுத்த இரண்டு வருட நிர்வாகத்திற்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்