தொடரும் இழுபறி.! பாகிஸ்தானில் ஆட்சியமைக்க போவது யார்.?

Imran khan - Nawaz sharif

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை.

இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.?

இப்படியான சூழலில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்றவர்கள் 101 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதில் 97 தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்ற கட்சிகள் பிற இடங்களை கைப்பற்றி உள்ளது.

இப்படியான சூழல் பெரும்பான்மை எனும் 133 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் 4 நாட்கள் ஆகியும் இன்னும் இன்னும் பாகிஸ்தானில் யார் ஆட்சி அமைக்க உள்ளார்கள் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இதில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிகம் வெற்றி பெற்று இருந்தாலும் அந்த கட்சி சார்பாக கூட்டணி குறித்து பேசுவதற்கு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் தலைவர் இம்ரான் கான் சிறையில் இருப்பதால் அங்கு பெரும் சிக்கல் நிலவுகிறது.

அதானால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பல்வேறு கட்சிகள் உடன் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. அதாவது, பிரதமர் பொறுப்பு பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி (நவாஸ் ஷெரிப்) கட்சிக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் பொறுப்பும் அளிக்கப்பட உள்ளதாகவும் . கூடுதலாக சேரும் கட்சி அல்லது சுயேச்சை உறுப்பினர்களுக்கு துணை சபாநாயகர் பொறுப்பு அழைக்கப்படலாம் என்றும் கூறபடுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) (PML-N) ,  பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகிய கட்சிகள் மற்றும் மற்ற சில சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்