பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நிகழ்வு நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sunita williams crew-10

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக அவர்கள் சென்றிருந்த நிலையில், விண்வெளியில் சில நாட்கள் மட்டும் தங்குவார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், Boeing’s Starliner விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அவர்கள் 9 மாதங்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கவேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டது.

அங்கு சிக்கியிருந்த அவர்கள் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு  நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.  எனவே, கடந்த மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டது. அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷ்யா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் சென்ற அந்த விண்கலம் , சர்வதேச விண்வெளி மையத்தை இந்திய நேரடி இன்று (மார்ச் 16) காலை 8 மணியளவில் சென்றடைந்தது. இதனையடுத்து, தற்போது ஃபால்கான் 9 விண்கலத்தில் இருந்து க்ரூ டிராகன் தனியாக பிரிந்து சென்றது என ஸ்பேஸ் எக்ஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

எப்போது திரும்புவார்கள்? 

நாசா அறிவித்துள்ளபடி, 2025 மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படவுள்ளனர். அமெரிக்க கிழக்கு நேரம் (ET) படி மார்ச் 18, 1:05 AMக்கும்  இந்திய நேரம் (IST) படி, மார்ச் 18 காலை 10:35 மணிக்கு புறப்படும் என தெரியவந்துள்ளது.  அதைப்போல, அமெரிக்க கிழக்கு நேரம் (ET) நேரப்படி, மார்ச் 18, 5:57 PM இந்திய நேரம் படி (IST): மார்ச் 19 அதிகாலை 3:27 மணிக்கு  புளோரிடா கடற்கரையில் அவர்கள் தரையிறங்குவார்கள்.

நேரலையில் எப்படி பார்க்கலாம்?

நாசா இந்த முழு நிகழ்வையும் நேரலையாக ஒளிபரப்புகிறது. இதில் வாயில் மூடும் செயல்முறை, விண்கலம் விடுபடும் தருணம் மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகள் அனைத்தும் காணலாம். நாசா தொலைக்காட்சி: நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலையாக பார்க்கலாம். அப்படி இல்லை என்றால் நாசாவின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.அதன் மூலம் பார்க்கலாம்.

  • செவ்வாய் காலை 8.15 மணி: விண்கலத்தின் நுழைவு வாயில் மூடல்
  • செவ்வாய் காலை 10.15 மணி: விண்கலத்தை பிரிக்கும் நிகழ்வின் நேரலை நாசா-வில் தொடக்கம்
  • செவ்வாய் இரவு 10.35 மணி : சர்வதேசி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலத்தை பிரிக்கும் பணி நிறைவு
  • செவ்வாய் இரவு 10.50 மணி: பூமியை நோக்கி பயணம் தொடக்கம் புதன்கிழமை அதிகாலை 2.15 மணி: நேரலை காட்சிகள் மீண்டும் நாசாவில் ஒளிபரப்பு
  • புதன்கிழமை அதிகாலை 2.41 மணிக்கு: விண்வெளியிலிருந்து பூமிக்குச் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தவுடன் என்ஜின்களின் இயக்கம் தொடங்கும் பணிகள் காண்பிக்கபடும்.
  • புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு: பூமியின் கடற்பகுதியில் விண்கலம் இறங்கும்.
  • புதன்கிழமை காலை 5 மணிக்கு: நாசாவின் செய்தியாளர் சந்திப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்