மார்பர்க் வைரஸ் என்றால் என்ன ? அதன் அறிகுறிகள் என்னென்ன ?

Default Image

எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த மிகவும் கொடிய ரத்தக்கசிவு காய்ச்சலான இந்த மார்பர்க் வைரஸ் நோய், பழ வெளவால்கள் மூலம் மக்களுக்கு பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மற்றும் மேற்பரப்புகளின் நேரடி தொடர்பு மூலம் மக்களிடையே பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்பர்க் மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானது. மார்பர்க் வைரஸின் கடந்த வருட இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருந்தது.ரூசெட்டஸ் வௌவால்கள் வசிக்கும் குகைகள் அல்லது சுரங்கங்களுக்கு அருகே நீண்ட நேரம் செலவிடும் போது, மார்பர்க் வைரஸ் பரவக்கூடும்.

ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம், சுரப்புகள், உறுப்புகள் அல்லது பிற உடல் திரவங்கள் (இரத்தம், வியர்வை அல்லது சளி) மற்றும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களுடன் நேரடி தொடர்புகொள்வதன் மூலம் மற்றொருவருக்கு பரவும்.

பாதிக்கப்பட்டவர்களின் ஆடை மற்றும் படுக்கை போன்றவற்றை மற்றவர் பயன்படுத்தும் போதும் இந்நோய் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது.வைரஸ் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் தெரிய இரண்டு முதல் 21 நாட்கள் ஆகும்.

அறிகுறிகள் தோன்றிய 8 முதல் 9 நாட்களுக்குப் பிறகு கடுமையான ரத்தக்கசிவினால் நோயாளிகள் இறந்துவிடுவார்கள். இது எபோலாவைப் போலவே ஆபத்தானது.

கடந்த ஆண்டு மார்பர்க்கிற்கு எந்த சிகிச்சையும் அல்லது தடுப்பூசியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மார்பர்க் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகளின் ஆதரவு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்