துப்பாக்கி முனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை.!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20-2024 லீக் போட்டியில் தற்போது விளையாடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் அவர் துப்பாக்கி முனையில் அவரிடம் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாண்ட்டன் சன் ஹோட்டலுக்கு அருகில் ஒரு மர்ம கும்பல், 28 வயதான ஃபேபியன் ஆலனை வழிமறித்து, அவரிடம் துப்பாக்கியை காட்டி, அவரை மிரட்டி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் SA 20 2024 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு பற்றி கவலையும், கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் ஆலனுக்கு எந்தவித காயமும் ஏற்படையவில்லை என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உயர்மட்ட கிரிக்கெட் அதிகாரி ஒருவர் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலி, ஆலனை தொடர்பு கொண்டார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓபேட் மெக்காய் மூலம் ஆலனிடம் பேசினோம். அவர் பேசுகையில், ஆலன் இங்கு நலமாக இருக்கிறார் என்றும், வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறினார்”, என்றும் வெஸ்ட் இண்டீஸ் உயர் அதிகாரி Cricbuzz எனும் கிரிக்கெட் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர்.