ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்கு பதில், வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை? ஆய்வில் வெளியான தகவல்..!
டெக்சாஸ் ஏ&எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனம் ஒரு ஆய்வாய் மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில், பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மிகவும் சோர்வாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை மற்றும் மதிய நேரங்களில் பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் தங்களது வேலைகளில் தவறு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் டெக்சாஸில் உள்ள ஒரு பெரிய எரிசக்தி நிறுவனத்தில் 789 அலுவலக ஊழியர்களின் கணினி பயன்பாட்டு அளவீடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், வெள்ளிக்கிழமை பணிகளில் தட்டச்சு வேகம், தட்டச்சு பிழைகள் மற்றும் மவுஸ் செயல்பாடு போன்ற விஷயங்கள் – கணினி வேலை முறைகளில் தவறை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேராசிரியர் ரோஹ் கூறுகையில், திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு நாளும் மக்கள் அதிக வார்த்தைகளைத் தட்டச்சு செய்தனர், மேலும் மவுஸ் இயக்கம், மவுஸ் கிளிக்குகள் மற்றும் ஸ்க்ரோல்கள் அதிகமாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் இந்த செயல்பாடு குறைவாக இருந்தது என தெரிவித்துள்ளார். இந்த ஆய்வினால், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்கு பதில், வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை விடலாம் என்ற யோசனை பலருக்கும் எழுந்துள்ளது.