“இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” – ஈரான் ஆவேசம்.!
அக். 1இல் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.
இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தங்களை தற்காத்து கொள்ளும் உரிமை, பதிலடி கொடுக்க வேண்டிய கடமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருக்க காசா, லெபனானில் இஸ்ரேல் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் வெளியுறவு அமைச்சகம், “தற்காப்புக்கான உரிமை தங்களுக்கும் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ள உரிமையும் கடமையும் இருப்பதாகக் கருதுகிறது” கூறியது.