அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்…
Israel : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது போர் தொடுத்து நூற்றுக்கணக்கானோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றது. இதில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா நகரில் போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.!
ஹமாஸ் மீதான காசா நகர் தாக்குதலை தொடர்ந்து கொண்டு இருக்கும் இஸ்ரேல், தற்போது காசா தெற்கு எல்லை பகுதியான ரஃபாவை நோக்கி முன்னேறி வருகிறது. இது குறித்து, MSNBC எனும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் ராணுவம் ரஃபாவை நோக்கி செல்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் , இதுதான் இஸ்ரேலின் சிவப்பு கோடு என எச்சரித்த பைடன் பின்னர் அதனை மறுத்து, சிவப்பு கொடு என்று கூறவில்லை. காசா நகரில் மக்கள் நலன் கருதி இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என கோருவதாக கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துக்கு பதில் கூறும் வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, POLITICO என்ற தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காசா பகுதியின் தெற்கு எல்லை நகரமான ரஃபாவின் மீது படையெடுப்பு என்பதை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
Read More – ஆபாச பட நடிகை சோபியா லியோன் 26 வயதில் மரணம்..! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
மேலும், நாங்கள் ரஃபேவுக்கு செல்வோம். அங்கிருந்து நாங்கள் வெளியேறப் போவதில்லை. எங்களுக்கு தெரியும், எங்கள் மீது “சிவப்புக் கோடு” உள்ளது. சிவப்புக் கோடு என்னவென்று உங்களுக்கும் தெரியும். அக்டோபர் 7 சம்பவம் போல் மீண்டும் நடக்க கூடாது. அது மீண்டும் நடக்கவும் செய்யாது. அதற்காக தான் நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
ஹமாஸுக்கு எதிராக நாங்கள் (இஸ்ரேல்) தாக்குதலை தொடர பல நாட்டு தலைவர்கள் மறைமுகமாக ஆதரவு இருக்கிறது. ஹமாஸின் முக்கால்வாசி பயங்கரவாத படைகளை அழித்துவிட்டோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் ஹமாஸின் கடைசி படையினர் வரையில் அழித்துவிடுவோம் என்று நெதன்யாகு தெரிவித்தார்.
READ MORE – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!
மேலும், இந்த போரில் 13,000 பாலஸ்தீனியப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆம் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஒவ்வொரு போராளிக்கும் 1 அல்லது 2 பொதுமக்கள் உயிரிழந்தனர் என மொத்தம் 26,000 பேர் கொல்லப்பட்டதாக நெதன்யாகு கூறினார்.
ரமலானுக்கு போர் இடைநிறுத்தம் செய்யப்படுமா என்ற கேள்வியை முற்றிலும் நிராகரித்தார் நெதன்யாகு. மேலும், அவர் ஹமாஸ் அமைப்பை அழித்து முழு விடுதலை இல்லாமல் இந்த போரை இடைநிறுத்தம் செய்யப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.