காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!
ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதால், தன்னார்வலர்கள் அமைப்பான WHO, காசாவில் உள்ள தனது சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மனிதாபிமான பங்காளிகளுடன் தொடர்பை இழந்துவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 21 நாட்களாக ஓயாமல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போரில் காசா நகரத்தில் பல பகுதிகளில் கட்டிடங்கள் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளது. இந்த இடிபாடுகளுக்கு அடியில் அடையாளம் தெரியாத 1,000 உடல்கள் புதைந்து கிடப்பதாகவும், அந்த உயிரிழந்த உடல்களின் எண்ணிக்கை இன்னும் இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், காசாவில் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு ஜோர்டான் அழைப்பு விடுத்துள்ளது.
காசா மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் ரகசிய தளம்.! வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்.!
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தன்னார்வலர்கள் அமைப்பான WHO, காசாவில் உள்ள தனது சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் தொடர்பை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது X தள பக்கத்தில், காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு சேர்க்க முடியவில்லை. எங்கள் சுகாதாரப் பணியாளர்ளுடனான தொடர்பை இழந்துள்ளோம்.
இதனால், காசாவில் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் உடல்நலம் அபாயங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. அனைத்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முழு மனிதாபிமான உதவிகளை அணுக விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
காசா நகரில் அடையாளம் தெரியாத 1,000 பேர் உடல்கள் – WHO தகவல்!
இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையே நடந்து வரும் போரால், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இதனால், காசாவில் வாழும் மக்களில் 96% பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.