“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

நாங்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தோம். அது தவறு தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Pakistan Minister Khawaja asif

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத கும்பலுக்கு உதவி செய்வது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு என்றும், இதற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு என்றும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது

இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தகம், தூதரகம், நதிநீர் பங்கீடு, விசா என பல்வேறு தடைகளை இந்தியா விதித்து வருகிறது. அதேபோல பாகிஸ்தான் அரசும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், நாங்கள் (பாகிஸ்தான்) பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தோம் என ஒப்புக்கொண்டுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸிற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பேட்டி அளித்து இருந்தார். அப்போது நெறியாளர், பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவ அளித்ததாக எழுந்த குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த குவாஜா ஆசிப், “ஆம், நாங்கள் 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அது தவறு தான். அமெரிக்கா மற்றும் பிரிட்டானிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக இந்த மோசமான செயலை செய்து வருகிறோம். ஆனால் அதற்கு நாங்கள் நிறைய அனுபவித்து விட்டோம். சோவியத் யூனியன் போரிற்கும், அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதில் நாங்கள் ஈடுபடவில்லை. ” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்