இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து மோதல்களினால் இரு நாடுகளுக்கு இடையான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய காரணமாக காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் னும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதனால் இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. தொடர்ந்து கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் கனடாவில் இருந்து யாரும் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்பொழுது, இந்திய தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், கனடாவில் நடந்து வரும் சூழ்நிலையை சாதாரணமாக கருதக்கூடாது என்றும், பேச்சு சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மற்றவர்களிடமிருந்து பாடங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் இதைப்பற்றி மக்களுக்குச் சொல்லலாம். பேச்சுச் சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை. அது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும், சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல.” என்று கூறினார்.
மேலும், கனடா இடையேயான சிக்கலை பற்றி பேசுகையில், ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, “மற்ற நாடுகள் இந்தியாவின் நிலையில் இருந்தால், அவர்களின் இராஜதந்திரிகள், தூதரகங்கள் மற்றும் குடிமக்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் எப்படி நடந்துகொள்வார்கள்.?” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம், காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் குழு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகத்திற்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…