போரை நாங்கள் தொடங்கவில்லை…ஆனால் முடித்துவைப்போம் – ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்த போரைத் நாங்கள் தொடங்கவில்லை என்றும் ஆனால் முடித்துவைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இன்றுடன் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியது.
இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது பதிவில், “இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை, இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால், இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றாலும், இஸ்ரேல் இந்த போரை முடித்துவிடும்.
எங்களைத் தாக்கி மிகப்பெரிய தவறைச் செய்து விட்டோம் என ஹமாஸ் புரிந்து கொள்ளும். அப்பாவி இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன.
வீடுகளில் புகுந்து குடும்பங்களை படுகொலை செய்தல், வெளியில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தல், ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் பிணைக் ககைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸை தோற்கடிக்க இஸ்ரேலுக்கு ஆதரிக்க வேண்டும்.
இன்று இஸ்ரேலுடன் துணை நிற்கும் உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஹமாஸுக்கு எதிரான இந்த போரில், இஸ்ரேல் தனது சொந்த மக்களுக்காக மட்டும் போராடவில்லை. காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நிற்கும் ஒவ்வொரு நாட்டிற்காகவும் போராடுகிறது என்று குறிப்பிட்டதோடு, இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்து இருந்த நிலையில், தற்போது காசாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025